‘இது 2022 விட மோசமா இருக்கே’: 4வது போட்டியிலும் சிஎஸ்கே தோல்வி…உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Author: Rajesh
9 April 2022, 9:26 pm

ஐ.பி.எல் 2022 தொடரின் 17-வது போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, ரூத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய போதிலும், 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உத்தப்பா வாஷிங்கடன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரூதுராஜூம் 13 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

36 ரன்களில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து, மொயின் அலி, அம்பதி ராயுடு இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. அம்பதி ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்கடன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மொயின் அலியும் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா மட்டும் 23 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் வாஷிங்கடன் சுந்தர், நடராஜன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். டார்கெட் 160-க்குள் இருந்ததால் தொடக்க வீரர்கள் இருவரும் விக்கெட் இழப்பின்றி நிதானமான பேட்டிங்கை மேற்கொண்டனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!