277 ரன்களை சேஸ் செய்யுமா இந்திய அணி…? காத்திருக்கும் மெகா ஜாக்பாட்.. ; வெயிட்டிங்கில் இந்திய ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 6:54 pm

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும்பட்சத்தில் புதிய சாதனை காத்திருக்கிறது.

அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆயத்தமாகும் விதமாக, ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, வார்னர் (52), இங்லீஸ் (45), ஸ்மித் (41), லபுஷக்னே (39) ஆகியோரின் பங்களிப்பினால், 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ஷமி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தற்போது டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிக்கான பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளது.

தற்போது, நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 277 ரன்களை அடித்து இந்திய அணி வெற்றி பெறும்பட்சத்தில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையிலும் முதலிடத்தை பிடிக்க முடியும். இதன்மூலம், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என 3 பிரிவு ஆட்டங்களிலும் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைக்கும்.

எனவே, இந்திய அணியின் வெற்றிக்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். தற்போது, இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி தொடக்க வீரர்கள் கெயிக்வாட், கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?