வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட லிட்டன் தாஸ்… சிராஜ் & விராட் கோலி கொடுத்த பதிலடி.. அனல் பறக்கும் வங்கதேச டெஸ்ட்!!

Author: Babu Lakshmanan
15 December 2022, 5:07 pm

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி வருகிறது.

இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று (டிச.,14) தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஸ்ரேயாஷ் ஐயர் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர், ஜோடி சேர்ந்த அஸ்வின் – குல்தீப் யாதவ் இணை சிறப்பாக நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 350 ரன்களையே இந்திய அணி எட்டுமா..? என்று சந்தேகமாக இருந்த நிலையில், இருவரும் மளமளவென ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த அஸ்வின் (52), குல்தீப் யாதவ் (40) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 404 ரன்களை குவித்தது.

வங்கதேச அணி தரப்பில் தைஜு இஸ்லாம், மெஹிதி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களும், எபடாத் ஹுசேன், ஹாலித் அகமது தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷாண்டே ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, யஷிர் அலியின் (4) விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். இதனால், வங்கதேச அணி 5 ரன்னுக்கே 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பின்னர், வந்த லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி விக்கெட்டை மேற்கொண்டு விளாமல் பார்த்துக் கொண்டார். அவர் 24 ரன்களை எடுத்திருந்த போது, 14வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசினார். அப்போது, சிராஜ் வழக்கம் போல, முடிந்தால் பந்தை தொட்டுப் பார் என்பது போல ஏதோ பேசினார்.

இதனால், கடுப்பான லிட்டன் தாஸ், ‘என்ன கூறினாய் திரும்பச் சொல்லு’ என்பது போல ரியாக்ஷன் கொடுத்தார். இவர்களின் காரசார வாதத்தினால் மைதானத்தில் அனல் பறந்தது. இதனால் சூடான சிராஜ், அடுத்த பந்திலேயே லிட்டன் தாஸை போல்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் வாய் மீது கை வைத்தும், காது கேட்கவில்லை என்பதை போலவும் ரியாக்ஷ்ன் கொடுத்து பதிலடி கொடுத்தார். உடனே சிராஜின் கொண்டாட்டத்தில் விராட் கோலியும் பங்கேற்று, லிட்டன் தாஸை கிண்டலடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேவேளையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன் ராபின்சன்னுக்கு சிராஜ் மற்றும் கோலி பதிலடி கொடுத்த வீடியோவையும் நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதனிடையே, 2வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!