முதல் டெஸ்ட்டிலே சோதனை.. பெங்களூரில் கொட்டித் தீர்க்கும் மழை

Author: Hariharasudhan
16 October 2024, 4:10 pm

பெங்களூரில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்தியா – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி, முதல் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று தொடங்க இருந்தது. ஆனால், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் பெங்களூரு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் டெஸ்ட் தொடர் நடைபெற இருந்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, மைதானத்தின் தரத்தை கிரிக்கெட் கமிட்டியாளர்கள் சோதனை செய்ய பிற்பகல் 01.50 மணிக்கு வந்தனர். ஆனால், அங்கு ஈரப்பதமும் குறையவில்லை, மழையும் நின்றபாடில்லை.

இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து…. யூடியூபருடன் ஊர் சுற்றும் நடிகை நடாஷா – வீடியோ!

எனவே, டாஸ் போடுவதில் தாமதம் ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்றைய முதல் நாள் முதல் ஆட்டம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை காலை 09.15 மணிக்கு தொடங்கும். இதற்கான டாஸ் காலை 08.45 மணிக்கு போடப்பட்டும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

Ground

இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரிட் பும்ரா (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபார்ஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்.

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளுண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கான்வாய், மாட் ஹென்றி, டேரில் மிட்சல், ரோர்க், அஜாஜ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்சல் சாட்னர், பென் சீர்ஸ், இஷ் சோதி, டிம் சவுதீ, கேன் வில்லியம்சன், வில் யங் ஆகியோர் விளையாடுகின்றனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!