‘விட்றாதடா தம்பி.. கப்பு முக்கியம்..’ இந்திய அணியின் அந்த சாதனையை தக்க வைப்பாரா ஹர்திக் பாண்டியா..? இன்று இலங்கையுடன் வாழ்வா..? சாவா..? ஆட்டம்!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 5:14 pm
Quick Share

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, நேற்று முன்தினம் 2வது டி20 போட்டியில் மோதியது. புனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில், கேப்டன் ஷனாகாவின் அதிரடி அரைசதத்தினால் இலங்கை அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு, அக்ஷர் படேல், சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டினாலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது.

இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று அரங்கேறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். எனவே, இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் மற்றும் சொந்த மண்ணில் 4 ஆண்டுகளாக டி20 தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

Views: - 337

0

0