புதிய சாதனை படைத்த HIT MAN… ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி சதம் ; வைரலாகும் ரிவர்ஸ் ஸ்வீப் SHOT..!!

Author: Babu Lakshmanan
17 January 2024, 9:30 pm
Quick Share

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடிய சதம் அடித்தார்.

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் பெங்களூரூவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணி, ஜெய்ஷ்வால் (4), கோலி (0), ஷிவம் துபே (1), சாம்சன் (0) என அடுத்தடுத்து சொற்ப ரன்னில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 22 ரன்னுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மா – ரிங்கு சிங் நிதானமாக ஆடினர்.

பிறகு, இறுதியில் இருவரும் அதிரடி காட்டத் தொடங்கினர். கேப்டன் ரோகித் ஷர்மா சதம் அடித்து அசத்தினார். இது டி20 கிரிக்கெட் போட்டியில் அவரது 5வது சதமாகும். இதன்மூலம், இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மறுமுனையில் ரிங்கு சிங்கும் அரைசதம் அடித்தார்.

இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் ஷர்மா 121 ரன்னுடனும், ரிங்கு சிங் 69 ரன்னுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

Views: - 645

0

0