பொளந்து கட்டிய ரஹானே… மீண்டும் தேடி வந்த வாய்ப்பு.. WTC பைனலுக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு ; குஷியில் சென்னை ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 12:03 pm

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் ஜுன் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அனுபவ வீரரான அஜின்கியா ரஹானே நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில், மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது வரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரு அரைசதங்களுடன் 209 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் 18 பவுண்டரிகளும், 11 சிக்சர்களையும் அடித்துள்ளார்.

இந்திய அணியின் விவரம்: ரோகித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ் பரத், அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  • ajith kumar putting condition on producers for his next movie அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?