ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய அணி : ரசிகர்கள் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2023, 1:52 pm

ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய அணி : ரசிகர்கள் உற்சாகம்!!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 19-வது லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே ஒரு போட்டியில் மோதினால் அந்த போட்டிக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி என்றால் சொல்லியா ஆகவேண்டும் கண்டிப்பாகவே இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த இரண்டு அணிகளும் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நல்ல பார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. அதைப்போல, பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் மோதி வெற்றிபெற்றுள்ளது.

இரண்டு அணிகளும் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இன்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ரோஹித் சர்மா(c), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம்(c), முகமது ரிஸ்வான்(wk), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

இந்திய அணியில் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு பதிலாக விளையாடி வந்த இஷான் கிஷன் இந்த போட்டியில் பெஞ்சில் இருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!