கோலியைப் போல செய்து காட்டிய இளம் வீரர்…. விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் : வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 1:08 pm

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 50 ரன்னுக்கு இலங்கை அணி சுருண்டது. இதைத் தொடர்ந்து, விளையாடி இந்திய அணி 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிய கோப்பையை வென்ற பிறகு இந்திய வீரர்கள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக மைதானத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இந்திய இளம் வீரர் இஷான் கிஷன், விராட் கோலி நடந்து செல்வதைப் போல நடந்து காண்பித்தார். ஆனால், அதை பார்த்த விராட் கோலி, இஷான் கிஷானின் இமிடேசனை கிண்டல் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தண்ணீர் கொடுக்க வந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?