பொளந்து கட்டிய பவல்… வெளுத்து வாங்கிய வார்னர்… வெற்றிக்காக போராடிய பூரண்… பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி

Author: Babu Lakshmanan
5 May 2022, 11:35 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி.

மும்பையில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டெல்லி அணிக்கு வார்னர் – பவல் ஜோடி அதிரடி காட்டி ரன்களை குவித்தது. 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் 100க்கும் அதிகமாக ரன்களை சேர்த்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்தனர். அதிகபட்சமாக, வார்னர் 92 ரன்களுடனும், பவல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கடின இலக்கை எதிர்த்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இதைத் தொடர்ந்து, மார்க்ரம் (42), திரிபாதி (22). மட்டும் ஓரளவுக்கு ரன்களை குவித்தனர். இறுதியில் நிகோல்ஸ் பூரணும் அதிரடியாக விளையாடினார்.

ஆனால், ஐதராபாத் அணி 21 ரன்கள் வித்திசாயத்தில் வெற்றி பெற்றது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!