திரிபாதி, மார்க்ரம் அதிரடி… வெற்றியைக் கோட்டை விட்ட கொல்கத்தா.. ஐதராபாத்திற்கு ஹாட்ரிக் வெற்றி..!!!

Author: Babu Lakshmanan
15 April 2022, 11:27 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது லீக் போட்டியில் ஐதராபாத் – கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . பின்ச் (7), வெங்கடேஷ் ஐயர் (6), சுனில் நரைன் (6) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

மறுமுனையில் ஸ்ரேயாஷ் ஐயர் (28), ஜாக்சன் (7) அவுட்டாகினர். ஆனால், ராணா (54), ரஸல் (49) அடித்து அசத்தினர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 3 ரன்களிலும் ,கேன் வில்லியம்சன் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .தொடர்ந்து ராகுல் திரிபாதி ,ஐடன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினர். இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். திரிபாதி 71 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மார்க்ரம் 68 (கடைசி வரை ஆட்டமிழக்காமல்), 18வது ஓவரிலேயே வெற்றி தேடி கொடுத்தார்.

இதன்மூலம், 3வது வெற்றி பெற்ற ஐதராபாத் மோசமான ரன்ரேட்டால் 7வது இடத்திலேயே நீடிக்கிறது.

Views: - 920

0

0