த்ரில்லான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய பூரண்… பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்த லக்னோ… ; மீண்டும் புள்ளிப்பட்டியலில் பரபரப்பு!

Author: Babu Lakshmanan
13 May 2023, 7:46 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கிளாசன் 47 ரன்களும், அப்துல சமாத் 37 ரன்கள் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து பேட் செய்த லக்னோ அணி ஆரம்பத்தில் தடுமாறியது. பின்னர், இளம் வீரர் மன்கட் (64 நாட் அவுட்), நிகோல் பூரண் (44 நாட் அவுட்) அதிரடியால் 6வது வெற்றியை பெற்றது. இதன்மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை அந்த அணி தக்க வைத்தது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?