49 முதல் 287 வரை…. பெங்களூரூ அணியின் மோசமான சாதனைகள்… சரித்திரம் படைத்த ஐதராபாத்..!!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 9:04 am
Quick Share

பெங்களூரூவுக்கு எதிரான எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி சரித்திர சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரூ – ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. ஹெட் (102), கிளாசன் (67) ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம், டி20 போட்டியில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஏற்கனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்களை ஐதராபாத் அணி குவித்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. தற்போது, அந்த சாதனையை ஐதராபாத் அணியே முறியடித்துள்ளது.

மேலும் படிக்க: அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் தான் வாக்கு சேகரிக்கிறாங்க ; கோவையில் கருணாஸ் பிரச்சாரம்!!

தொடர்ந்து, பேட் செய்த பெங்களூரூ அணிக்கு, தினேஷ் கார்த்திக் (83), டூபிளசிஸ் (62), விராட் கோலி (42) ஆகியோர் எவ்வளவோ போராடியும், அந்த அணியால்7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல், ஒரு போட்டியில் அதிகபட்ச (4,6) பவுண்டரிகளை விளாசிய ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் – தென்னாப்ரிக்கா (81) ஆட்டத்தை இந்தப் போட்டி சமன் செய்தது. அதேபோல, அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட போட்டியின் பட்டியலில் ஐதராபாத் – மும்பை (38) ஆட்டத்தையும் சமன் செய்தது.

மேலும், ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து அதிகபட்ச ஸ்கோரை (549) குவித்த ஆட்டமாக இது அமைந்துள்ளது.

அதேவேளையில், ஐபிஎல் வரலாற்றி மோசமான சாதனையை பெங்களூரூ அணி படைத்துள்ளது. பேட்டிங்கில் குறைந்தபட்சமாக (49) ரன்களை குவித்த அணி என்ற மோசமான சாதனையை ஏற்கனவே படைத்திருந்தது. அதேபோல, அதிகபட்ச (287) ரன்களை வாரி வழங்கிய அணியாகவும் தற்போது மாறியுள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களை மேலும் மேலும் வலியை உண்டாக்கியுள்ளளது.

Views: - 485

0

0