அருமையான தொடக்கத்தை கொடுத்த ஜெய்ஸ்வால்.. மீண்டும் வீழ்ந்த சென்னை : அஸ்வின் ஆட்டத்தால் வெற்றி பெற்ற ராஜஸ்தான் 2ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 11:18 pm
RR WON - Updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 150 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவன் கான்வே களமிறங்கினார்கள். இதில் 2 ரன்கள் எடுத்து ருதுராஜ் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

அதிரடியாக ஆடிவந்த மொயின் அலி 19 பந்துகளுக்கு 51 ரன்கள் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மறுமுனையில் இருந்த டெவன் கான்வே 16 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இந்த தொடக்கத்தை பார்த்த ரசிகர்கள், 200+ ரன்கள் இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கெட்கள் சரியதொடங்கியது. அந்தவகையில் ஜெகதிசன் 1 ரன்கள் எடுத்தும், அம்பதி ராயுடு 3 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் தோனி களமிறங்கினார்.

மொயின் அலியுடன் இணைந்து அவர் அதிரடியாக ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தோனி நிதானமாக ஆடதொடங்கினார். 26 ரன்கள் எடுத்து தோனி தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த மொயின் அலி, 57 பந்துகளுக்கு 93 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார்.

அருமையான அஸ்திவாரத்தை துவக்கி வைத்த ஜெய்ஸ்வால் 59 ரன்னில் ஆட்டமிக்க அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஆனால் அஸ்வின் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியின் வெற்றியை மீட்டெடுத்தார்.

19.4 ஓவரில் ராஜஸ்தான் 151 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் 18 புள்ளிகளை பெற்று 2ஆம் இடத்திற்கு முன்னேறியது.

Views: - 1379

0

0