வரலாற்றை உருவாக்கிய நியூசிலாந்து.. மாற்றிய இந்தியா.. டெஸ்ட் தொடர் சாதனை!

Author: Hariharasudhan
26 October 2024, 6:20 pm

இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

புனே: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி விளையாடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. மேலும், சில வரலாற்று நிகழ்வுகளும் நடைபெற்று உள்ளன.

India

இதன்படி, சுமார் 69 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதாவது, 1955ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது.

இதையும் படிங்க: சொந்த மண்ணில் இந்திய அணி மோசமான சாதனை.. 5 பேர் டக்அவுட்.. அசுர வேகத்தில் நியூசி..!!

அப்போது முதல் 12 முறை டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாடினாலும் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றவில்லை. இந்த நிலையில் தான், முதல் முறையாக இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இப்படியொரு சாதனையை நிகழ்த்த, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 18 முறை தொடர் வெற்றியை முறியடிக்க முற்பட்டு இருக்கிறது. அந்த வகையில், 18 முறையும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த நியூசிலாந்து அணி, 20-ஐ கூட நெருங்க முடியாமல் தோல்வியைச் சந்தித்து உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!