இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. ஆசிய போட்டியில் குண்டு எறிதலில் இந்திய வீரர் அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2023, 6:33 pm

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. ஆசிய போட்டியில் குண்டு எறிதலில் இந்திய வீரர் அசத்தல்!!

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சோவ் நகரில் தொடங்கி, இன்று 8 வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று காலையிலேயே இந்தியா பதக்க வேட்டையுடன் துவங்கியது. காலையில், கோல்ப் விளையாட்டில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட அதிதி அசோக் வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். கோல்ப் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை அதிதி அசோக் ஆவார்.

அதனை அடுத்து ஆண்கள் துப்பாக்கி சுடுதல் ட்ராப்50 விளையாட்டு பிரிவில், இந்திய வீரர்கள் கினான் டேரியஸ் சென்னாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர். பெண்கள் ட்ராப் டீம் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர் மற்றும் ப்ரீத்தி ரஜக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இதனை அடுத்து, தடைதாண்டுதல் (Steeplechase) [போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட அவினாஷ் சேபிள் 8:19:53 நிமிடத்தில் தடை தாண்டி, முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட தஜிந்தர் பால் சிங் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இவர் 20.36 மீ தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் தற்போது வரை இந்திய அணி 13 தங்கப்பதக்கங்கள், 18 வெள்ளி பதக்கங்கள், 17 வெண்கல பதக்கங்கள் என மொத்தமாக 48 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?