CSK போட்டியிலும் சொதப்பல்… தொடர்ந்து தடுமாறும் ரோகித் சர்மா ; ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. 2வது இடத்தில் தமிழக வீரர்..!!

Author: Babu Lakshmanan
6 May 2023, 4:35 pm

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. யார் பிளே ஆஃப்பிற்கு செல்வார்கள் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் 49வது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் விளையாடி வருகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் சென்னை பவுலர்களின் ஆதிக்கமே தலைதூக்கியுள்ளது. டாஸ் வென்று சென்னை பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பேட் செய்து வரும் மும்பை விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

கடந்த சில தினங்களாக பேட்டிங்கில் தடுமாறி வரும் ரோகித் சர்மா, இந்த முறை தொடக்க வீரராக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக க்ரீன் களமிறங்கினார். ஆனால், இந்த முயற்சியும் மும்பைக்கு கைகொடுக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்களான க்ரீன் (6), இஷான் கிஷான் (7) என ஆட்டமிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா இந்த முறையும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம், அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை அவர் பெற்றுள்ளார். இதுவரையில் அவர் 16 முறை ரன் எதுவுமின்றி வெளியேறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், மந்தீப் சிங், ஆகியோர் 15 முறை டக் அவுட்டாகி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?