அன்று இந்தியாவுக்கு…. இன்று பாகிஸ்தானுக்கு… நியூசி.,க்கு எதிரான அரையிறுதியில் மீண்டும் ரீவைண்ட் செய்யப்பட்ட கிளைமேக்ஸ் …!!!

Author: Babu Lakshmanan
9 November 2022, 6:14 pm

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து, பாகிஸ்தான் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது.

சிட்னியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இருப்பினும், மிட்சல் (53 நாட் அவுட்), கேப்டன் வில்லியம்சன் (46) ஆகியோர் கைகொடுக்க, 20 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த பாகிஸ்தான் அணி இலக்கை நோக்கி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. பாகிஸ்தான் வீரர்கள் கொடுத்த வாய்ப்புகளை நியூசிலாந்து அணியினர் தவறவிட்டனர். இதனால், கேப்டன் பாபர் ஆசம், ரிஷ்வான் இணை முதல் விக்கெட்டுககு 105 ரன்கள் சேர்த்தது.

பாபர் ஆசம் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, 19 பந்துகளுக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், போல்ட் வீசிய டாஸ் பந்தை அடித்த ரிஸ்வான் பிலிப்ஸிடம் கேட்ச்சாகி அவுட்டானார். ஆனால், இதனை நோ-பால் என்று அப்பில் செய்தனர். ஆனால், 3வது நடுவரால் அவுட் வழங்கப்பட்டது. ஏற்கனவே, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நவாஸ் வீசிய டாஸ் பந்தை, விராட் கோலி நோ-பால் கேட்ட சம்பவம் இங்கு நினைவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, பரபரப்பான ஆட்டத்தில் 6 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, சவுதி ஒரு வைடு வீசினார். இதற்கு அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்து மசூத் பாகிஸ்தானை வெற்றி பெறச் செய்தார்.

இதே நிலைமையில்தான், அதாவது ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் நவாஸ் வைடு வீசினார்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்ந்த சில காட்சிகள் பாகிஸ்தானுக்கு இன்றைய நிகழ்வில் அரங்கேறியது சிட்னியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?