ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்… அடித்துக் கொண்ட மும்பை – குஜராத் அணிகள் : 2 மணி நேரத்தில் கைமாறிய ஹர்திக்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 8:16 pm

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்… அடித்துக் கொண்ட மும்பை – குஜராத் அணிகள் : 2 மணி நேரத்தில் கைமாறிய ஹர்திக்!!

ஐபிஎல் சீசன் தொடஃக உள்ளது. இதில் ஒரு அணியிடமிருந்து மற்றொரு அணி வீரர்களையும் இல்லை பணமாகவோ மாற்றிக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் படி குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியானது .
மும்பை அணியில் போதிய ஆல்ரவுண்டர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதற்கான பணத்தை மும்பை அணி குஜராத் இடம் வழங்கியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ஐபிஎல் வீரர்கள் பட்டியலை குஜராத் அணி வெளியிட்டது. இதில் ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் குஜராத் அணி அறிவித்து இருக்கிறது

இது நடப்பாண்டின் மிகப்பெரிய ட்விஸ்ட் ஆக பார்க்கப்பட்டது. இது மும்பை அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். தூதுவன் வருவான் மாறிப் பொழியும் என ஆயிரத்தில் ஒருவன் வசனத்தை எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்காக போட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், மாலை 7.15மணி அளவில் மீண்டும் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதன் படி, குஜராத் அணியும்,ஹர்திக் பாண்டியாவும் கேட்ட தொகையை வழங்க மும்பை அணி முன்வந்துள்ளது. அதன் படி, தற்போதைய நிலவரப்படி மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா எதிர்பார்த்தது போல் கைமாற்றப்பட்டார். ஒரே நாளில் 2 அணியில் இடம்மாறி ஹர்திக் பாண்டியா புதிய டிவிஸ்டை வைத்திருக்கிறார். ஹர்திக் திரும்பி இருப்பதால் மும்பை ரசிகர்கள் காட்டில் மும்மாரி பொழிவது உறுதி தான்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?