‘நான் ஒரு முறை கூட கப்பு ஜெயிச்சதில்ல’.. விராட் கோலி சொன்ன அந்த வார்த்தை… மீண்டெழுமா பெண்கள் அணி..?

Author: Babu Lakshmanan
17 March 2023, 2:27 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே மகளிர் பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியட்ஸ், குஜராத் ஜெய்ண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தலா 2 முறை மோதுதல் உள்பட ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் அனைத்து விதிகளும் இந்தத் தொடரில் பின்பற்றப்படுகின்றன.

இதில், இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவி அதிர்ச்சி கொடுத்தது. கடைசியாக விளையாடிய உ.பி வாரியர்ஸ்க்கு எதிராக வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இனி வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கும்.

ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் நிகழும் சோகம், பெண்கள் ஐபிஎல்லிலும் பெங்களூரூவுக்கு தொடர்வது அந்த அணியின் ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு மகளிர் அணி வீராங்கனைகளை பெங்களூரு ஆண்கள் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சந்தித்து பேசினார். அப்போது, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

அவர்க கூறியதாவது :- கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் போட்டியை விளையாடி வருகிறேன். இன்னும் ஒருமுறையை கோப்பை ஜெயிக்கவில்லை. இருந்தாலும், ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டி மீதான ஆர்வம் குறையவில்லை.
வென்றால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்க மாட்டேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் தீவிரமாக விளையாடுவதால்தான் உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் நமக்கு இருக்கின்றனர்.

ஆனால் 110 சதவீதம் உழைப்பைச் செலுத்துவோம் என்கிற உத்தரவாதத்தைத் தர முடியும். இதுதான் உண்மையான சோதனை. ஆனால் இதுதான், தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள உதவும் பாடம். ஆகையால், எப்போதும் முகத்தை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளுங்கள், என்று கூறினார்.

கோலியின் இந்த அட்வைஸ் மகளிர் அணிக்கு பெரிய உந்துகோளாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Views: - 89

0

0

Leave a Reply