இது அவுட்டா…? சர்ச்சைக்குள்ளான LBW… கடுப்பான விராட் கோலி… ‘ரூல்ஸ்-ஐ படிச்சுட்டு வாங்க’ ; விளாசும் நெட்டிசன்கள்!!

Author: Babu Lakshmanan
18 February 2023, 4:02 pm
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் அவுட் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி முன்னணி வீரர்களின் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

தற்போதைய நிலவரப்படி இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. அக்சர் படேல் 67 ரன்னிலும், அஸ்வின் 237 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக, முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 44 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஹ்ரிமென் வீசிய பந்து விராட் கோலியில் பேடில் பட்டதும் நடுவர் அவுட் கொடுத்தார். இதனால், விராட் கோலி ரிவ்யூ எடுத்தார். அதில், பந்து பேட்டிற்கும், பேடிற்கும் இடையே இருந்த நிலையில் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. பந்து முதலில் பேட்டில் பட்டதா? அல்லது பேடில் பட்டதா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

இதையடுத்து, மூன்றாம் நடுவரும் களத்தில் இருந்த நடுவரின் முடிவை போன்றே அவுட் கொடுத்தார். இதையடுத்து, களத்தில் இருந்து வெளியேறிய கோலி, பயிற்சியாளர்களுடன் இருந்தபோது தொலைக்காட்சியில் பார்த்தார். அப்போது, அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், விராட் கோலிக்கு அவுட் கொடுத்தது தவறான முடிவு என்று நடுவர்களை இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதலில் நடுவர்கள் ஐசிசியின் விதிகளை படித்து விட்டு வருமாறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 369

0

0