கோவையில் “ஹவர் ஆப் கோட்” கொண்டாட்டம் தொடக்கம்…!!

6 December 2019, 8:21 pm
Quick Share

கோவை: கோவையில் கணினி அறிவியலை ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்படும் நிகழ்வான “ஹவர் ஆப் கோட்” கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கம்ப்யூட்டிங் முன்னோடி அட்மிரல் கிரேஸ் முர்ரே ஹாப்பரின் பிறந்த நாளை முன்னிட்டு சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்கள் டிசம்பர் மாதத்தில் “ஹவர் ஆப் கோட்” நிகழ்வை கொண்டாடி வருகின்றனர். முதன் முறையாக கோவையில் உள்ள 25 தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளில் “ஹவர் ஆஃப் கோட்” இந்த நிகழ்வை நடத்துகின்றனர். இந்த முயற்சியை ஜிடிஜி தலைமையில் பேஸ்புக் படங்கள் மற்றும் முசிறி தமிழ்நாடு ,ஸ்கூல் ஆப் ஏஐ , விக்கிமீடியா போன்றவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் 10ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப சமூகங்களை பற்றி அறிவை வழங்குவதிலும் 1000 மாணவர்களுக்கு நிரலாக்க மொழியின் ஹேண்ட்ஸ் ஆன் அனுபவத்தை வழங்கியும் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கான முதல் நிகழ்வாக கோவை கொடிசியா அருகில் அமைந்துள்ள ஜிஆர்டி கல்லூரியில் இன்று தொடங்கியது .இதில் தன்னார்வ தொண்டர் புவனா மீனாட்சி, மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரான பத்மநாபன் ,கீதா பத்மநாபன், சாந்தா, ராதாமணி ,சுஜாதா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் பங்கு பெற்றனர்.