மேம்பாலத்தில் இருந்து குப்புற கவிழ்ந்த லாரி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!!

Author: Udayachandran
10 October 2020, 3:15 pm
Lorry Upset - Updatenews360
Quick Share

விழுப்புரம் : மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புறக் கவிழ்ந்து லாரி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் விழுந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த மாதிரிமங்கலம் என்ற இடத்தில் கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்டரக்கோட்டை பகுதியில் ஜல்லி இறக்குவதற்காக வந்த லாரி திண்டிவனம் நோக்கி சென்ற போது மாதிரிமங்கலம் என்ற இடத்தில் பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி மேம்பாலத்தில் இருந்து தண்ணீரில் விழுந்த லாரியில் இருந்து ஓட்டுநர் தமிழ் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், அதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Views: - 51

0

0