அமெரிக்காவில் சிகிச்சைக்கு பின்னர் டி.ராஜேந்தர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்.!

Author: Rajesh
5 July 2022, 11:21 am

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் சாதித்தவர் டி.ராஜேந்தர். இவரைப் போலவே இவரது மகன் சிலம்பரசன் சினிமாவில் சிறுவயதிலேயே நுழைந்து சாதித்துள்ளார். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக டி.ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவர் தனது மேல் சிகிச்சைகாக அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். மேலும் அவருக்கு மேல் சிகிச்சை எல்லாம் முடிந்து நலமாகியுள்ள நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் டி.ராஜேந்தர் அவரின் இரு மகன்களான சிலம்பரசன் மற்றும் குறளரசன் இருவருடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!