இன்னும் இந்த நெல்சன் திருந்தவே இல்லப்பா.. கதை இது தானா என கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

Author: Rajesh
17 June 2022, 1:52 pm

ரஜினி நடிப்பில் கடைசியான வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், கலவையான விமர்சனங்களை தான் இந்த படம் பெற்றது. இதனிடையே, சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, ரஜினியும் மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த டைட்டில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெயிலர் என்று படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் பட தலைப்பு என்கிற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை கொண்டும், ஏற்கனவே வெளியான நெல்சன் படங்களை கொண்டும், ரசிகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கதை கூற ஆரம்பித்து விட்டனர். நெல்சனின் முதல் படம் ஒரு வேன் சம்பந்தப்படுத்தி இருக்கும்.

இரண்டாவது படமான டாக்டர் ஒரு கடத்தல் ரெசார்ட் ஹோட்டல் சுற்றி இருக்கும். அதே போல, தளபதி விஜயின் பீஸ்ட் படம் முழுக்க ஒரு ஷாப்பிங் மால்-க்குள் இருக்கும். அதே போல இந்த ஜெயிலர் போஸ்டரில் ஜும் செய்து பார்த்தல் அதன் பின்னணியில் ஒரு ஜெயில் செட் இருப்பது தெரியும்.

அப்போ இந்த படம் ஜெயிலில் நடக்கும் கதையாக இருக்கும், ஒருவேளை, ஜெயிலில் ரஜினி தவறுதலாக குற்றவாளியாக மாற்றப்பட்டு இருக்கலாம், அதில் இருந்து எப்படி தனது கூட்டாளிகளுடன் தப்புவார், அல்லது கைதிகளை அடக்கும் ஜெயில் வார்டனாக இருப்பார். என இஷ்டத்துக்கு இப்போதையே கதையை கூற ஆரம்பித்து விட்டார்கள் நெட்டிசன்கள்.. பீஸ்ட் படத்தில் விஜய் வாயில் இருக்கும் கத்தி தான் இது என்றும் நெட்டிசன் இணையத்தில் பரப்பி விட ஆரம்பித்து விட்டனர்.

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?