கோழி திருடிய இளைஞர்கள்… சிசிடிவி ஆதாரங்களை கொடுத்து உதவிய குடும்பம்… வீடு தேடி வந்து அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல்..!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 2:11 pm

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சி கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து கும்பல் ஒன்று மிரட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தை கொண்டான் பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா. இவரது கணவர் தாமோதர கண்ணன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லாவண்யா அவரது தாயுடன் வசித்து வருகிறார். லாவண்யாவின் வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழி திருடு போய் உள்ளது.

இது தொடர்பாக அந்த குடும்பத்தினர் லாவண்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி காட்சிகளை கேட்டுள்ளனர். சிசிடி கட்சிகளை லாவண்யா கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு லாவண்யா வீட்டிற்கு சென்ற சிலர் அவரின் வீட்டின் வாசலில் பட்டாசை வெடிக்க வைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த லாவண்யாவின் தாயார் யார் என்று விசாரித்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற சிலர் அவரை மிரட்டி உள்ளனர். பின்னர் லாவண்யா வெளியே வந்து யார் என கேட்டுள்ளார். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு மிரட்டி உள்ளனர்.

மேலும் வீட்டின் சுவர் மீது ஏறி வீட்டின் போர்ட்டிகோவில் நின்றிருந்த கார் மீது ஏறி அரிவாளை வைத்து மிரட்டி விட்டு சென்றுள்ளனர். போலீசாருக்கு எப்படி சிசிடிவி காட்சிகள் கொடுக்கலாம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இது குறித்து லாவண்யா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்கு காவல் துறையினர் மகேந்திரன், மருதுபாண்டி, பூபேஷ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://player.vimeo.com/video/764076286?h=176139a99d&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • sasikumar freedom movie postponed due to financial issues ஃப்ரீடம்க்கு Freedom இல்லையா? சசிகுமார் திரைப்படம் வெளியாகாததற்கு இதுதான் காரணமா?