திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளாரா நடிகை ஷாலினி.? அதுவும் அந்த பிரமாண்ட படத்திலா.?

Author: Rajesh
12 June 2022, 12:05 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்குப் பின்னர் நடிகை ஷாலினி படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு குடும்பத்தை கவனித்து வரும் குடும்ப பெண்ணாக மாறி விட்டார்.

இப்படியான நிலையில் கிட்டத்தட்ட 21 வருடங்களுக்குப் பிறகு திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஷாலினி. ஆமாம் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உலகம் முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!