விக்கி-நயன் திருமணம்.. கடற்கரைக்கு வரும் மக்களை விரட்டும் காவல்துறை.? அதிருப்தியில் பொதுமக்கள்..!

Author: Rajesh
9 June 2022, 11:05 am

கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. திருமணத்தில் பங்கேற்பவர்கள் மொபைல்களில் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. நயன்-விக்கி ஜோடியின் வரவேற்பு விழா ஜூன்-10ம் தேதியான நாளைய தினம் நடைபெறுகிறது.

அதிகாலை முதலே இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் வர தொடங்கிவிட்டனர். இதில் மணிரத்னம், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் பொன்வண்ணன் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து காலை 10.25 மணிக்கு நடிகை நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.

இதுவரை இந்த இருவரை காதலர்களாக பார்த்த பலரும், இவர்களை கணவன் மனைவியாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்ப்பதில் ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடற்கரை மற்றும் பல்வேறு வழித்தடங்கள் வழியாக திருமணத்திற்கு அழைப்பு விடுக்காத மற்ற நபர்கள் திருமணம் நடைபெறும் பகுதிக்குள் நுழைந்திடாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.

உள்ளே செல்பவர்கள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்பது மாதிரியான பலத்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே திருமணம் நடைபெற்றது. கடற்கரைக்கு வரும் மக்களை விக்கி-நயன் கல்யாணத்துக்கு வந்ததாக நினைத்து விரட்டும் காவல்துறையால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!