ஆவணம் உரிய இன்றி எடுத்துவரப்பட்ட ரூபாய் 1.72 லட்சம் பறிமுதல்

17 March 2021, 5:47 pm
Quick Share

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூபாய் 1.72 லட்சம் கைப்பற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை – வேட்டவலம் சாலையில் கீரனூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் பருதிமான் கலைஞன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது இருசக்கர வாகனத்தில் ரூபாய் 92 ஆயிரம் சின்ன ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த அங்குசாமி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் கீரனூர் அருகே இருசக்கர வாகனத்தில் 92 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் . விசாரணையின் போது, எந்த ஒரு ஆவணமும் இன்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதேபோல் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்பென்ன்னாத்தூர்- அவலூர்பேட்டை சாலையில் மேக்களூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டுக்குளம் கிராமத்தை சேர்ந்த சூர்யா இருசக்கர வாகனத்தில் ரூபாய் 80 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது அவரிடம் எந்த ஒரு ஆவணமும் இன்றி பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை தேர்தல் பறக்கும் படையினர் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கன்னப்பனிடம் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் ரூபாய் 1.72 லட்சம் பணத்தை ஒப்படைத்தனர்.

Views: - 22

0

0