விவசாயி வளர்த்த வாழை மரத்தில் 10 அடி நீளத்தில் அதிசய வாழைக்குலை : செல்பி எடுக்க குவிந்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2021, 9:03 pm
Banana Tree - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : செறுகோல் பகுதியில் உள்ள வீட்டில் விவசாயி வளர்த்த வாழை மரத்தில் 10 அடி நீள குலை தள்ளிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். விவசாயி இவர் வீட்டருகில் வாழை விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்த வாழை மரத்தில் சுமார் 10 அடி நீளத்திற்கு வாழைக்குலை தள்ளியது. இந்த வாழைக்குலையை அந்த பகுதியை வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதுடன் அதன் அருகில் நின்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும வருகின்றனர்.

இது குறித்து விவசாயி மகள் கூறும்போது, தனது தந்தை இயற்கை விவசாய முறையில் வாழை மரங்கள் நட்டு வருவதாகவும் தற்போது இந்த வாழை மரத்தில் சுமார் 10 இடி நீளத்துக்கு குலை வந்துள்ளது அதிசயமாக இருப்பதாகவும், பொதுமக்கள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்வதால் மிகவும் பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Views: - 467

0

0