அடேங்கப்பா… 10 அடி நீளமா? தனியார் தோட்டத்தில் சிக்கிய மெகா சைஸ் ராஜநாகம் : வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2023, 6:10 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய கிராமமாகும், இங்கு சைலஜா என்பவரது தோட்டத்தில் மோட்டார் அறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து வனத்துறையினர் மற்றும் தனியார் தொண்டு அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர் அப்பொழுது அங்கு மிகவும் ஆபத்தான விஷம் கொண்ட 10 அடி நீளமுள்ள அரிய வகை ராஜநாகம் என்பது தெரியவந்தது.

இதை அடுத்து உடனடியாக அந்த ராஜநாகம் மீட்கப்பட்டு காப்புக் காடு பகுதியில் நீர் நிலை அருகில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. ராஜநாகம் மட்டுமே மற்ற பாம்புகளை உணவாக உட்கொள்ளக் கூடியது.

மேலும் தனது வாழ்விடத் திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவு வரை சென்று உணவு தேடக்கூடிய தன்மை உடையதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராஜ நாகம் ஒருவரை தீண்டினால் 20 வினாடிகளில் உயிர் பிரியும் ஆபத்து உள்ளதாக வனவியலாளர்கள் கூறுகிறார்கள்.

https://vimeo.com/869827225?share=copy

இந்த ஆபத்தான இராஜ நாகத்தைமீட்டு காப்பு காட்டில் விடுவித்த wildlife Wranglers,வண்ணம் ஆகிய தனியார் தொண்டு அமைப்பினர்களையும் வனத்துறையினரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!