கேப்டன் பிறந்தநாளில் 100 கிலோ பிரியாணி : கிராம மக்களுக்கு வாரி வழங்கிய தேமுதிகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 12:39 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈய்யனூர் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் விசுவாசிகள் மற்றும் சிங்கப்பூர் நண்பர்கள் சார்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ் எஸ் கருணாகரன் தலைமையில் தேமுதிக கொடியேற்றி ஊர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி அதனைத் தொடர்ந்து சுமார் 100 கிலோ பிரியாணியை ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர்.

மேலும் ஊர் பொதுமக்கள் சார்பாக கேக் வெட்டி மாணவ மாணவிகள் விஜயகாந்த் பாட்டிற்கு நடனமாடி கொண்டாடினர்.

இதில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார் ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு பிறந்தநாளை கொண்டாடினர்

அன்னதானம் விஜயகாந்துக்கு பிடிக்கும் என்பதாலே ஊருக்கே பிரியாணி வழங்கிய கேப்டன் விசுவாசிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?