10 முறை அல்ல.. 11வது முறையும் தோல்விதான் : கோபமாக பேசிய செந்தில் பாலாஜி..!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2025, 4:23 pm
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு பயனாளிகளிடம் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாநகராட்சி மேயர் கவிதா, அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோரிக்கை வழங்கி, அதில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து உள்ளனர்.

அரசு திட்டங்களில் முதல்வர் பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி இதுவரை நடந்த 10 தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். 11 வது முறையாக அவர் சந்திக்க உள்ள தேர்தலிலும், மக்கள் அவருக்கு தோல்வியை பரிசளிக்க உள்ளனர் என்றார்.
