‘தல‘ தான் என்னோட TARGET : 12 வயதே ஆன கேரள இளம் இயக்குநர் ஆஷிக்கின் ஆசை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2021, 11:44 am
12 year old director- Updatenews360
Quick Share

பல்வேறு ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை இயக்கிய கேரள இயக்குநர் 12 வயதான ஆசிக் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 12 வயதே ஆன ஆசிக் என்ற சிறுவன் 6 குறும்படம், ஒரு ஆவணப்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை குவித்து சாதனை படைத்துள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை வென்ற ஆஷிக் தற்போது போதை விழிப்புணர்வு குறித்த ஈ.வி.ஏ என்ற பெயரில் வணிக ரீதியலான படத்தை 30 நாட்களில் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கான டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பின்னர் பேசிய ஆஷிக், தனது திரைப்படத்தை நடிகர் அஜித்திடம் காண்பித்து, அவரை வைத்து வருங்காலத்தில் படம் இயக்க ஆசைப்படவதாக தெரிவித்துள்ளார்.

Views: - 425

0

1