விபத்தில் மூளைச்சாவு அடைந்த 12ம் வகுப்பு மாணவன் : உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!!

6 November 2020, 6:11 pm
Organ Donate - Updatenews360
Quick Share

கோவை : விபத்தில் மூளைச்சாவு அடைந்த 12ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்த கோபால் – விமலாதேவியின் மகன் வைத்தீஸ்வரன். இவர் அமிர்த வித்யாலயம் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் கோவில்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து வைத்தீஸ்வரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க தாய் தந்தையர் முடிவு செய்தனர். அதன்படி கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு , அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இது குறித்து அவரது தந்தை கூறுகையில், மூளைச்சாவு ஏற்பட்ட தனது மகன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், இவர் சிறுவயது முதலே எட்டிமடை கிராம வளர்ச்சிக்காகவும் ஆன்மீக பணிகளிலும் பெருமளவில் ஈடுபட்டு வந்ததால் உடல் உறுப்பு தானம் செய்ய அவரே விரும்பி இருந்த்தாக கண்ணீர் மல்க கூறினார்.

Views: - 26

0

0