ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிக் கொண்ட மாணவர்கள்.. பேருந்து நிலையத்தில் ஷாக் : வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2024, 1:45 pm

மதுரை மாநகரின் முக்கிய பகுதியான தெப்பக்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காட்சியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கின்றனர். மேலும் இரண்டு மாணவர்களை கும்பலாக சேர்ந்து இருண்ட குழுக்களாக பிரித்து ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒரு மாணவரை சரமாரியாக தாக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து ஒரு கட்டத்தில் கற்களை எடுத்து தூக்கி வீசும் காட்சிகளும் இடம்பெற்று இருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதையும் படியுங்க: மகளிர் பள்ளி கழிவறைக்குள் மாணவிகளுக்கு நடந்த கொடூரம் : தப்ப முயன்ற ஆசிரியருக்கு செருப்படி!

24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் அப்பகுதியில் காவல் துறையினர் இருந்து வரும் வேலையில் ஒரே பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து இரண்டு மாணவர்களை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?