13 திமுக அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள்… முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு பலிக்காது : அடித்து கூறும் சிவி சண்முகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2022, 5:13 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. பன்னீர்செல்வம் போன்ற எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்க நினைத்தால் அது நடக்காது என சிவி.சண்முகம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டன உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டன உயர்வுக்கு எதிராக கட்டன உயர்வுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்த கண்டன கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துக்கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சிவி.சண்முகம், இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் திமுக அரசுக்கு மற்றொரு செய்தி சொல்கிறோம்.

இன்றைக்கு அதிமுகவில் மூன்று முதல்வரை பதவியை அனுபவித்துவிட்டு, கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து, அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் திருடி சென்றுவிட்டு, அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்கிவிடலாம் என நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது.

தொண்டர்களை நம்பியுள்ளேன் என கூறிவருகிறார். ஆனால் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர், ஆனால் அவர் பக்கம் ரவுடிகளும், குண்டர்களூமே உள்ளனர். தொண்டர்கள் உள்ளவரை யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

நூறு பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது, நூறு துரோகிகளை அதிமுக பார்த்துள்ளது. பன்னீர்செல்வம் சின்னத்தையும், கட்சியையும் முடக்க நினைத்தவருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி.

இன்றைக்கு மின்சார கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை, ஆண்டுக்கு ஆறு சதவீதம் கட்டனம் உயர்த்தப்படும். விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கும் மீட்டர் பொருத்தப்படவுள்ளது.

அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் நாங்கள் பயந்துவிடுவோமா . திமுகவில் 13 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. விரைவில் திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள். எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம். என பேசினார்.

Views: - 183

0

0