பரிகாரம் என்ற பெயரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: பூசாரிக்கு சாகும்வரை சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

16 July 2021, 11:37 am
pocso judge
Quick Share

தூத்துக்குடி: பரிகார பூஜை செய்வதாக கூறி 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முக்கானியைச் சேர்ந்த மாசானமுத்து என்பவர் சுடலைமாட சுவாமி கோயில் பூசாரியாக உள்ளார். 2019ம் ஆண்டு தரிசனத்துக்கு வந்த பெண்ணிடம் அவரது 15 வயது மகளை ராமேசுவரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று பரிகாரம் செய்தால் உடல்சரியாகும் என கூறியுள்ளார்.

பின்னர், சிறுமியை அழைத்துச் சென்று ராமேசுவரம் விடுதியில் தங்க வைத்த மாசானமுத்து, பாலியல் வன்முறை செய்துள்ளார். இதனையடுத்து, சிறுமி அங்கிருந்து தப்பி ராமேசுவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் மாசானமுத்துவை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்ற நீதிபதிசுபத்ரா, மாசானமுத்துவை சாகும் வரை சிறையில் அடைக்கவும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Views: - 117

0

0