வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற நபர்: கையும் களவுமாக போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்..!!

11 May 2021, 2:01 pm
Quick Share

கோவை: ஆத்துப்பாலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞரிடம் இருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆத்துப்பாலம் அருகில் உள்ள குறிச்சி பிரிவு என்.பி. இட்டேரி பகுதியை சேர்ந்த அபு என்ற தாடி அபு என்ற இளைஞர் முழுஊரடங்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனை அறிந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் என்.பி. இட்டேரியில் உள்ள ஜமாத்தாரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து ஜமாத்தாரும், பொதுமக்களும் திடீரென அபுவின் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர்.

சோதனையில் 150 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மறைத்துவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து ஊர்பொதுமக்கள் அபுவை பிடித்து கோவை போத்தனூர் காவல் நிலைய போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பறிமுதல் செய்த மதுபானங்களை பெற்றுக்கொண்ட போலிசார் அபுமீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்பொழுது இந்த வீடியோவானது சமூக வளைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Views: - 226

0

0