நெடுஞ்சாலை துறையில் 156 அலுவலர்களுக்கு பதவி உயர்வு : அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

Author: Babu Lakshmanan
14 September 2021, 5:41 pm
EV Velu - Updatenews360
Quick Share

சென்னை : நெடுஞ்சாலை துறையில் 156 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்து அமைச்சர் எ.வ.வேலு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நெடுஞ்சாலைத்‌ துறையில்‌ மூன்றாண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு அளிக்கப்படாமல்‌ கிடப்பில்‌ போடப்பட்டு இருந்தது. இதனை மாண்புமிகு அமைச்சர்‌ அவர்களின்‌ கவனத்திற்கு அலுவலர்கள்‌ கொண்டு சென்றனர்‌. அதனை பரிசீலனை செய்து நேற்று (13.09.2021) மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை மற்றும்‌ நெடுஞ்சாலைத்‌ துறை மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை அமைச்சர்‌ எ.வ.வேலு அவர்கள்‌ 156 அலுவலர்களுக்கு கீழ்கண்டவாறு பதவி உயர்வு அளித்து நீண்ட நாள்‌ கோரிக்கையினை நிறைவேற்றியுள்ளார்‌.

  • தட்டச்சர்‌ – இளநிலை உதவியாளர்‌ நிலையில்‌ இருந்து உதவியாளர்‌ பதவி உயர்வு (91 அலுவலர்கள்‌)
  • வரைதொழில்‌ அலுவலர்‌ நிலையில்‌ இருந்து முதுநிலை வரை தொழில்‌ அலுவலர்‌ (29 அலுவலர்கள்‌)
  • உதவியாளர்‌ நிலையில்‌ இருந்து கண்காணிப்பாளர்‌ (26 அலுவலர்கள்‌)
  • உதவியாளர்‌, கண்காணிப்பாளர்‌ நிலையில்‌ இருந்து கோட்ட கணக்கர்‌ (10 அலுவலர்கள்‌)

Views: - 123

0

0