55 வயது பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த 17 வயது சிறுவன்… ஆத்திரத்தில் செய்த செயல் ; சேலத்தை உலுக்கிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
16 February 2024, 2:17 pm

சேலம் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த 55 வயது பெண்ணை 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்துள்ள இருப்பாளி ஊராட்சி குருக்கப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், அவரது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவி பெருமாயி (55) மட்டும் தனியே வசித்து வந்தார். மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருவதால், பெருமாயி தனி வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 12ம் தேதி பெருமாயி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், உடலை மீட்ட போலீசார், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், சம்பவத்தன்று பெருமாயின் வீட்டிற்கு வந்து சென்றவர்களின் விபரம் குறித்து திரட்டிய போலீசாருக்கு, குருக்கப்பட்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவன் வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில், பெருமாயியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவன், திடுக்கிடும் தகவலை கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, தண்ணீர் வாங்கி குடிப்பதற்காக பெருமாயி வீட்டிற்கு சென்ற அந்த சிறுவன், பெருமாயியை உல்லாசத்திற்கு அழைத்ததாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்து அடித்ததால் ஆத்திரமடைந்த அவன், பெருமாயியை கீழே தள்ளி, அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாக கூறியுள்ளான்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?