முறை தவறிய உறவால் 17 வயது தங்கை கர்ப்பம்.. கருக்கலைப்பு செய்ததால் விபரீதம் : அண்ணன் தலைமறைவு!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2025, 10:29 am

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் கூலி விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர்களின் 17 வயது சிறுமி செவிலியராக படித்து வந்தார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார நபரான ஆன 17 வயது நபர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலித்து வந்த இவர்கள் வீட்டை விட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியில் சென்று உள்ளனர்.

இந்த நிலையில் 17 வயது சிறுமியின் பெற்றோர்கள் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் 17 வயது சிறுமியை தேடி வந்தனர்.

17 வயது சிறுவன் தான் காதலித்து அழைத்துச் சென்றான் என்று அந்த 17 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் காதலித்து ஊரை விட்டு சென்ற இவர்கள் முறை தவறிய உறவு என்றும் அண்ணன் தங்கை உறவு வருகிறது என்று கூறப்படுகிறது.

இதனிடயே 17 வயது சிறுமியை பெற்றோர்கள் பிரித்து ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமியை ஆந்திர மாநிலம் பண்ணுர் என்ற இடத்தில் தனியார் மருத்துவமனையில் வைத்து அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.

பின்னர் சொந்த ஊருக்கு வந்தவுடன் இந்த பெண்ணிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, திருத்தணி நகராட்சியில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர்.

அங்கு இங்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டதால் அந்த பெண்ணை உடனடியாக திருவள்ளூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிகிச்சையில் 14 நாட்கள் இருந்த அந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த இளம்பெண்ணை கருக்கலைப்பு செய்த ஆந்திர மாநிலம் தனியார் மருத்துவமனையின் மருத்துவம் படிக்காத பெண் செவிலியர் வயலட்கனி மற்றும் சிவாடா கிராமத்தைச் சேர்ந்த ஹரிபாபு ஆகிய இருவரை பொதட்டூர்பேட்டை போலீசார் இந்த சம்பவத்தில் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முறை தவறிய உறவின் மூலமாக காதல் வயப்பட்டு 17 வயது சிறுவன் 17 வயது சிறுமி இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

மேலும் 17 வயது சிறுமி 5 மாத கர்ப்பிணி கரு கலைக்கப்பட்ட சம்பவத்தில் இறந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சிறுமி உயிர் இழந்த விவகாரத்தில் 17 வயது சிறுவனையும் அவனது குடும்பத்தாரையும் பொதட்டூர்பேட்டை போலீசார் உதவியுடன் திருத்தணி அனைத்து மகளிர் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!