சென்னையில் இன்று ஒரே நாள் மட்டும் 1,705 சிறப்பு பேருந்துகள் : பிற மாவட்டங்களுக்கு இயக்கம்!!

12 November 2020, 1:11 pm
Karnataka Bus - Updatenews360
Quick Share

சென்னை : தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்க சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக தமிழகம் முழுவது 14 ஆயிரத்து 757 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகளுடன் கூடுதலாக இன்று 1705 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் நாளை மட்டும் 1,580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று மட்டும் சிறப்பு பேருந்துகளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 31 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 84 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

Views: - 19

0

0