19 வயது இளம்பெண்ணை சீரழித்த 23 பேர் : 7 நாட்களாக நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2025, 12:00 pm

19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 19 வயது இளம்பெண் மார்ச் 29ஆம் தேதி தனது நண்பரை காண சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

இதையும் படியுங்க: தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை.. பனியன் தொழிலாளர்களுக்கு காத்திருந்த ஷாக்!

ஆனால் அதன் பின் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பாண்டேபூர் பகுதியில் மீட்கப்பட்டார்.

இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், போதை மருந்து கொடுத்து ஒருவாரமாக 23 பேர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யதாக பரபரப்பு புகார் அளித்தார்.

மேலும் பல்வேறு இடங்களுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். எஞ்சியவர்களை தேடி வரும் போலீசார், நிச்சயம் அனைவரையும் கைது செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!