ராயல் கேர் டாக்டரிடம் 2.85 கோடி மோசடி: குற்றவாளிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Author: Aarthi
15 September 2021, 10:16 am
Quick Share

கோவை: கோவையில் ராயல் கேர் டாக்டர் மருத்துவமனையை விரிவாக்கம் மற்றும் கட்டிட வேலைக்காக லோன் வாங்கி தருவதாக கூறி 2.85 கோடி கமிஷன் தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஷ்வரனுக்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக கடந்த, 2020 அக்டோபர் மாதம் புதுக்கோட்டை, ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம், 55 உள்ளிட்ட 4 நபர்கள் தொடர்புகொண்டு பேசினர். அப்போது கமிஷன் தொகையாக, 2.85 கோடி ரூபாய் பெற்றவர்கள் மோசடி செய்தனர். இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவுவில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் நேற்று உத்தரவிட்டார். உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

Views: - 137

0

0