கோவையில் இரு வேறு விபத்துகளில் 2 முதியவர்கள் பலி: வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை..!!
Author: Aarthi Sivakumar24 August 2021, 12:46 pm
கோவை: கோவையில் நடந்த இரு வேறு சம்பவங்களில் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டி தவறி விழுந்தும், ரயில் மோதி முதியவரும் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோவை காந்தி பார்க் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் இவருடைய மனைவி பொன்னுத்தாய் வயது 65, இவர் ஆட்டோவில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஆட்டோ வைசியாள் வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது திடீரென்று மாடு குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அதில் ஆட்டோவில் இருந்த பொன்னுத்தாய் தவறிக் கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பொன்னுத்தாய் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக மூதாட்டி உயிர் இழந்தார். இதுகுறித்து கோவை ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல கோவை சோமனூர் சூலூர் இடையே ரயில் தண்டவாளத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோண்த்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0