கழிப்பறை இல்லாததால் நிகழ்ந்த சோகம்… இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு… கண்ணீரில் குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
28 October 2023, 4:53 pm
Quick Share

திருவண்ணாமலையில் கழிப்பறை வசதி இல்லாததால் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போளூர் அடுத்த பெரியகரம் அருகே உள்ள காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் காவ்யா. இவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக இன்று காலை வயல்வெளிக்கு சென்றுள்ளார். அவர் செல்வதை கவனித்த அவரது மகள் பவ்ய ஸ்ரீ மற்றும் அவரது அண்ணன் மகள் சிந்து பாரதி என்பவரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கிணற்றில் இருவருத் தவறி விழுந்துள்ளனர். நீரில் மூழ்கிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், அப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறைகள் உடனடியாக ஏற்படுத்தித் தரப்படும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 411

0

0