நடுரோட்டில் காரை மறித்து தம்பதியை அடிக்க பாய்ந்த 2 பேர்… தடுக்க வந்த Ex கவுன்சிலர், எஸ்ஐக்கும் மிரட்டல் : பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 3:47 pm
Fight - Updatenews360
Quick Share

நடுரோட்டில் காரை நிறுத்தி தம்பதியை அடிக்க பாய்ந்த 2 பேர்… தடுக்க வந்த கவுன்சிலர், எஸ்ஐக்கும் மிரட்டல் : பரபரப்பு!!!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே வடமதுரை பகுதியில் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து பன்னீர்மடை திரும்பும் சாலையில் TN38CA4833 என்ற பதிவு எண் கொண்ட ஹுண்டாய் வெர்னா கார் திரும்பியுள்ளது.

இதனை ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் என தெரிகிறது. அவருடன் அவரது நண்பர் டோமினிக் பிரான்சிஸ் உடன் வந்துள்ளார்.

அப்போது பன்னீர்மடை சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் திரும்புவதற்காக தார் ஜீப் வந்துள்ளது. இதனை துடியலூர் காளியம்மாள் காலனியைச் சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார் உடன் அவரது மனைவி வந்துள்ளார்.

அப்போது வடமதுரை ஜங்சனில் ஜீப் காரில் மோதுவது போல் வந்தாகக் கூறி காரில் இருந்து இறங்கி வந்த ஸ்டீபன் மற்றும் டோமினிக் பிரான்சிஸ் ஆகிய 2 பேரும் ஜீப்பை ஓட்டிவந்த செந்தில்நாதனை கீழே இறங்கச் சொல்லி நடுரோட்டில் சட்டையைப் பிடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

கணவரை அடிப்பதைப் பார்த்து செந்தில்நாதனில் மனைவி அவர் முன்பு அரணாக நின்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் ரவுடிகளைப் போல் அவரையும் மீறி மீண்டும் மீண்டும் தாக்கிக்கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் கோவை மாவட்ட Exகவுன்சிலர் கவி சரவணகுமார் ஆகியோர் அவர்களை தடுக்க முட்பட்டனர். ஆனால் அவர்களை தாக்கியும் கெட்ட வார்த்தைகளாலும் திட்டினர்.

அவர் மாவட்ட கவுன்சிலர் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்தும் நீ யார்டா நீ யார்டா எனக்கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி அடிக்கப் பாய்ந்தனர். மேலும் நாங்களும் கட்சிக் காரங்கதான் என்று மிரட்டல் விடுத்தனர்.

அப்போது அங்கு வந்த துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களை தடுத்து நிறுத்தி இருதரப்பினரையும் காவல் நிலையம் வரச் சொன்னபோது ஸ்டீபன் மற்றும் டோமினிக் இருவரும் காரை எடுக்காமல் ஜீப்பை எடுக்கச் சொல்லி காவல் உதவி ஆய்வாளரையும் மிரட்டிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 238

0

0