2 சதவீத வரி ரத்து : தமிழக முதலமைச்சருக்கு கோவை தொழில் துறையினர் நன்றி!!

7 November 2020, 5:15 pm
Thx CM - Updatenews360
Quick Share

கோவை : கடன்களை பதிவு செய்ய விதிக்கப்பட்ட 2 சதவீத வரியை ரத்து செய்ததை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் தொழில்முனைவோர்கள் வங்கியில் வாங்குகின்ற கடன்களை பதிவு செய்வதற்கு 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தொழில் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி மூலமாக இந்த வரி விதிப்பில் இருந்து தொழில் முனைவோர்களுக்கு பதிவுக் கட்டணத்தை இலிருந்து விலக்களிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவை பயணியர் விடுதியில் தொழில் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் கோவை சேர்ந்த தொழில் முனைவோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஜேம்ஸ் எஸ்.சுருளிவேல் பி.நல்லதம்பி உள்ளிட்டவர்கள் பங்கேற்றார்கள்.

Views: - 19

0

0