திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் +2 மாணவி தற்கொலை : சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 11:45 am
Thiruvallur School Student Suicide - Updatenews360
Quick Share

திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம் என்ற விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகளான 17 வது மாணவி திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம் போல இன்று காலை பள்ளி சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்ற நிலையில் தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவறிந்து வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு கருதி போலீசார் மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் காலனி, தூக்கிட்டு கொண்ட கீழச்சேரி தனியார் விடுதி, மாணவியின் சடலும் வைக்கப்பட்டுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தடுப்புகளை ஏற்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது சொந்த ஊரான திருத்தணி தெக்கலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடங்குவதற்கள் அடுத்தடுத்து பள்ளி மாணவிகளின் மரணம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 502

0

0